இந்துக் கலைகள் – திருமந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
ஆய்வுச் சுருக்கம்
இந்த ஆய்வு திருமந்திரம் என்னும் சைவ சித்தாந்த இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் உள்ளடக்கங்களையும், குறிப்பாக கலைகளுடன் அதன் தொடர்பையும் ஆராய்கிறது.
திருமூலர் இயற்றிய இந்த நூல் பக்தி இலக்கிய காலத்தில் உருவான முக்கியமான ஆன்மீக நூலாகும். திருமந்திரம் பக்தி சார்ந்த கருத்துக்களை மட்டுமின்றி, அறம், அறிவியல், மருத்துவம், தத்துவம், யோகம் மற்றும் பல்வேறு கலைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து விளக்குகிறது. இதன் மூலம் இந்து சமயத்தின் பல்துறை ஆழமும், அதன் வாழ்வியல் நோக்கும் வெளிப்படுகின்றன.
இந்த ஆய்வு குறிப்பாக திருமந்திரத்தில் கலைகள் எவ்வாறு எடுத்துரைக்கப்படுகின்றன, எந்தக் கலைகள் குறிப்பிடப்படுகின்றன, மற்றும் அவை மனித வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைக் கவனமாக பகுப்பாய்வு செய்கிறது. கலைகள் மனிதனின் ஒழுக்கம், அறிவு, ஆன்மீக முன்னேற்றம் ஆகியவற்றை மேம்படுத்தும் கருவிகளாக பார்க்கப்படுகின்றன.
முடிவாக, திருமந்திரம் ஒரு மத நூலாக மட்டுமல்லாமல், மனித வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை ஒருங்கிணைக்கும் முழுமையான தத்துவ மற்றும் அறிவியல் அடிப்படையிலான நூலாக இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
செல்வி வேவோகா செல்வராசா
ஆய்வாளர்முதுதத்துவமானி பட்ட ஆய்வாளர்,
பட்டப்படிப்புகள் பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
