
இலங்கையின் இந்து சமூகத்தின் ஆன்மிக வாழ்வியலை ஆராய்தலையும் ஆவணப்படுத்தலையும் நோக்கமாகக் கொண்டு, ஆதாரம் அறக்கட்டளை தனது ஆய்வுப்பிரிவினை ஆரம்பிக்கின்றது.
கடுகதியில் மாறிவரும் வாழ்க்கைச்சூழலில் தொலைத்து விடுகின்ற ஆன்மீக வாழ்வியலை மீட்டெடுத்து, அதனைப் பயில்வதுடன் வருங்கால சந்ததியினருக்கும் வழங்கும் அரும்பணியை ஆதாரம் அறக்கட்டளை, தனது ஆய்வுப்பிரிவினூடாக முன்னெடுக்கவுள்ளது.
மனித ஒழுக்கம், வாழ்வியல் மதிப்புகள், சமூக உறவுகள், என அனைத்தையும் வழிநடத்தும் ஆழமான ஆன்மிகப் பாரம்பரியங்கள் பேணப்பட வேண்டியதுடன்., மூத்தவர்களின் அனுபவங்கள், பாரம்பரிய அறிவுகள், ஆன்மிக சிந்தனைகள் காலத்தின் ஓட்டத்தில் மறைந்து விடாமல் ஆய்வுகளின் மூலம் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
இத்தகைய ஆய்வுகள் மரபையும் நவீனத்தையும் இணைக்கும் பாலமாக இருந்து, சமூக ஒற்றுமை, மனநலம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு
வழிகாட்டியாக அமைகின்றன.
ஆதாரம் அறக்கட்டளை தன் ஆய்வுப்பிரிவின் இத்தகைய பணிகளுக்கு சமூகத்தின் மேலான ஒத்துழைப்பையும் பங்கேற்கையும் நாடிநிற்கின்றது.

